
நான் கண்ணன். பிறந்ததும் தற்போது வசிப்பதும் ராமநாதபுரத்தில்! கராத்தே என் கனவாக இருந்த பொழுதில் ஆரம்பித்த வேகம் இப்போது என்னை பிஸியான கராத்தே மாஸ்டராக மாற்றி இருக்கிறது காலம். கிட்டத்தட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு கராத்தே பயிற்றுனராக இருக்கிறேன். நல்ல, வளமான இந்தியா குறித்து கனவு காணும் நம் அப்துல் கலாமுக்கு இன்றைய தேவை மன அரோக்கியத்துடன் கூடிய இளைய சமுதாயம்தான். அதற்கு உடல் ஆரோக்கியமும் அவசியம். சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம் என்பது நம் மூத்தோர் வாக்கு. நம் உடல் வலிமையாக இருந்தால் மனமும் எண்ணங்களும் வலிமையானதாக ஆற்றல் மிக்கதாக இருக்கும். என் கனவும் அதுதான்... நல்ல மன மற்றும் உடல் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்குவதுதான். அதை திறம்பட செய்யவேண்டும் என்பதுதான் என் ஒவ்வொரு நாளின் துவக்கத்தின் முதல் பிரார்த்தனையாகவும் இருக்கிறது. சாதாரண இளைஞனாக வாழ்வின் அந்திம பகுதியிலிருந்து என்னை இன்று பொறுப்பு மிகுந்த ஆசிரியனாக மாற்றி இருப்பதும் இதே கராத்தே கலைதான். அது என் சுவாசம்.. அதுவே என் வாழ்க்கை! ஒரு வலைதளம் ஆரம்பிக்கவேண்டும் என்பதும்.. அதில் கராத்தே குறித்த பல விஷயங்களை பதிவிட வேண்டும் என்பதும் என் கனவுகளுள் ஒன்று.. இதோ இந்த வலைப்பதிவிலிருந்து தொடங்குகிறேன். என் வலைதளத்தை பொறுமையாக படிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல... இனி.. இந்தப் பதிவில் என் படங்கள் உங்கள் பார்வைக்காக....



மாஸ்டர் எப்படி இருகிங்க உங்கள் கனவுகள் நிச்சியம் நடக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeletekudos master! u'l becum a blaster!
ReplyDeleteyour karate knowledge is very valuable for students.your students will
ReplyDeletebecome great karate masters.thank you for giving me the permission for give the comment.
by j.ram prasad,student of a.v.m.s.school,ramanathapuram